Home உலகம் பாகிஸ்தானுக்கு இனி உதவி கிடையாது – டிரம்ப் அதிரடி

பாகிஸ்தானுக்கு இனி உதவி கிடையாது – டிரம்ப் அதிரடி

1058
0
SHARE
Ad

Trumpவாஷிங்டன் – பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்குத் துணை போகிறது எனக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி பாகிஸ்தானுக்கு நிதி உதவிகள் வழங்க மாட்டோம் என அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

இன்று புத்தாண்டு தினத்தில் தனது டுவிட்டர் தளத்தில் டிரம்ப் கீழ்க்காணுமாறு பதிவிட்டிருக்கிறார்:

donald trump-tweet-pakistan-01012018“கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் அமெரிக்க டாலரை பாகிஸ்தானுக்கு நிதி உதவியாக வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் நமக்குத் தந்தது ஒன்றுமில்லை. மாறாக நமது தலைவர்களை முட்டாள்களாகக் கருதிக் கொண்டு அவர்கள் பொய்களையும், ஏமாற்றுத் தனங்களையும்தான் தந்தார்கள். நாம் ஆப்கானிஸ்தானில் வேட்டையாடித் தேடிக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளுக்கு அவர்கள் பாதுகாப்பான அடைக்கலம் தந்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து சொற்ப உதவியையே கிடைக்கிறது. இந்நிலை இனியும் தொடரக் கூடாது” – என டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.