Home Video ரஜினியின் புதிய காணொளி – இணையத் தளம் – செயலி தொடக்கம்

ரஜினியின் புதிய காணொளி – இணையத் தளம் – செயலி தொடக்கம்

1155
0
SHARE
Ad

rajini-politics-announcement-31122017 (9)சென்னை – அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாகத் தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

முதல் கட்டமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தனது இரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட ரஜினி, தனது சார்பில் ‘ரஜினிமன்றம்’ என்ற பெயரிலான (www.rajinimanram.org) புதிய இணையத் தளத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சுமார் ஒருநிமிட காணொளி (வீடியோ) மூலம் ரஜினி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், ரஜினி தனது ரஜினிமன்றம் பெயரிலான குறுஞ்செயலி ஒன்றையும் அண்ட்ரோய்டு தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ரஜினியின் இணையத் தளத்தில் இரசிகர்களும் ஆதரவாளர்களும், தங்களின் பெயர், ஆதார் அட்டை எண் போன்ற விவரங்களோடு தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

அனைவரும் இணைந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் ரஜினி அறைகூவல் விடுத்துள்ளார்.

ரஜினிகாந்தின் ஒரு நிமிட காணொளியைக் கீழே காணலாம்: