Home நாடு ஞாயிற்றுக்கிழமை பிரதமர் வேட்பாளரை அறிவிக்கிறது பக்காத்தான்!

ஞாயிற்றுக்கிழமை பிரதமர் வேட்பாளரை அறிவிக்கிறது பக்காத்தான்!

859
0
SHARE
Ad

mahathir-tun-கோலாலம்பூர் – தங்களின் பிரதமர் வேட்பாளர் உட்பட வரும் பொதுத்தேர்தலுக்கான பல்வேறு அறிவிப்புகளை வரும் ஞாயிற்றுக்கிழமை பக்காத்தான் ஹராப்பான் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் நடைபெறும் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என பக்காத்தான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

பக்காத்தான் தரப்பில் இருந்து இன்னும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படாமல் இருப்பது எதிர்க்கட்சிக் கூட்டணியை தேர்தலின் போது பாதித்துவிடும் என்பதால் இதனைத் தாங்கள் முன்கூட்டியே செய்வதாகவும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுவதையும் மகாதீர் மறுத்திருக்கிறார்.

“அவை ஒரு ஆரூடம் தான். மாநாட்டில் முடிவில் உண்மைகள் தெரிய வரும். பக்காத்தான் கூட்டணி தற்போது ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது” என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.