Home கலை உலகம் நட்சத்திர விழா 2018: கிரிக்கெட் போட்டிக்கான வெற்றிக் கோப்பையை வெளியிட்டார் ரஜினி!

நட்சத்திர விழா 2018: கிரிக்கெட் போட்டிக்கான வெற்றிக் கோப்பையை வெளியிட்டார் ரஜினி!

1499
0
SHARE
Ad

Natchathira Vizhaகோலாலம்பூர் – தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பிரம்மாண்ட நட்சத்திர விழா 2018 இன்று சனிக்கிழமை கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

இன்று காலை 10 மணி தொடங்கி இரவு வரை நட்சத்திர கிரிக்கெட், காற்பந்துப் போட்டி ஆகியவற்றோடு திரைப்பட முன்னோட்டங்கள் வெளியீடு, விளம்பரங்கள் உள்ளிட்ட அங்கங்களும் இடம்பெறவிருக்கின்றன.

இதனிடையே, நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விருந்து உபசரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

ரஜினியும், சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணனும், இன்று நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிக்கான வெற்றிக் கிண்ணங்களை அறிமுகம் செய்தனர்.