ஹேய்பேய் – சீனாவின் ஹேய்பேய் என்ற இடத்தில் உலகின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் 2017-ன் இறுதியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
1,600 அடி (488 மீட்டர்) நீளமும், 715 அடி (218 மீட்டர்) உயரமும் கொண்ட இந்தப் பாலத்தில் நடப்பவர்கள் மிக திகிலான அனுபவங்களை உணர்கின்றார்கள் என சீன ஊடகங்கள் கூறுகின்றன.
13 அடி அகலம் (4 மீட்டர்) கொண்ட இப்பாலம், 1,077 கண்ணாடிச் சட்டங்களால் ஆனது என்பதோடு, 1.6 இன்சுகள் தடிமன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.