Home நாடு பிரதமருடன் ரஜினி சந்திப்பு

பிரதமருடன் ரஜினி சந்திப்பு

1013
0
SHARE
Ad

najib-rajiniபுத்ரா ஜெயா – கோலாலம்பூரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாவில் பங்கு பெற வருகை தந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பிரதமரின் இல்லம் சென்று மரியாதை நிமித்தமான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டில் சென்னைக்கு பிரதமர் நஜிப் வருகை தந்தபோது, ரஜினிகாந்த் வீட்டிற்கும் வருகை தந்து அவரைச் சந்தித்தார்.

najib-rajini-chennai-2017
கடந்த ஆண்டு பிரதமர் சென்னைக்கு வருகை தந்தபோது, ரஜினியின் இல்லத்துக்கும் வருகை தந்தார்.

அதனைத் தொடர்ந்து பதில் மரியாதை தெரிவிக்கும் விதத்தில் நஜிப் இல்லத்திற்கு ரஜினி வருகை தந்தார்.

#TamilSchoolmychoice

ரஜினியின் வருகையை புகைப்படத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நஜிப் “தலைவா சூப்பர் ஸ்டார் ரஜினியை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. இந்த முறை மலேசியாவில் சந்திக்கிறேன். மலேசியாவில் உங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் களிக்க வாழ்த்துகள்” எனவும் தெரிவித்திருக்கிறார்.