Home அரசியல் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிர்கட்சிகளுக்கு வெறும் 10 நிமிடங்களா? ஜ.செ.க நிராகரித்தது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிர்கட்சிகளுக்கு வெறும் 10 நிமிடங்களா? ஜ.செ.க நிராகரித்தது.

644
0
SHARE
Ad

Lim-Guan-Eng-2பினாங்கு,மார்ச் 26 – எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலுக்காக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் ஆர்.டி.எம் என்ற மலேசிய வானொலி, தொலைகாட்சியில் எதிர்கட்சிகள் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையைப் பற்றித்  தெரிவிப்பதற்கு அரசாங்கம் 10 நிமிடங்கள் வழங்கும் என்று, தகவல், தொடர்புத் துறை அமைச்சர் ராயிஸ் யாத்திம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிக்கு 10 நிமிடம் ஒர் அவமானம்-லிம் குவான் எங்-

ந்த 10 நிமிடத்தை, தாம் ஓர் அவமானமாக கருதுவதாகவும், இதை வழங்குவதன் மூலம் அரசு எதிர்கட்சிகளுக்கு, பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கிவிட்டதாக நினைத்து  எல்லோரையும் ஏமாற்றத் தாங்கள் இடம் கொடுக்கப் போவதில்லை என்றும் ஜ.செ.க. தலைமைச் செயலாளர் லிம் கூறினார்.

#TamilSchoolmychoice

10 நிமிடத்தை ஏற்றுக்கொள்ள நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல- லிம் ஆவேசம்

முன்னதாக ராயிஸ் யாத்திம், ஒளிபரப்பு நேரம் தேசிய முன்னணிக்கும், எதிர்கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும், உரைகள் முன்கூட்டியே பதிவுசெய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் ராயிஸ் தெரிவிக்கையில் அதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் கட்சிகளைப் பொறுத்தது என்றார். இதற்கு பதிலளித்த லிம், எல்லா நேரத்திலும் தங்களைத் (எதிர்கட்சிகளை) தாக்கி பரப்புரை செய்துவிட்டு, வெறும் 10 நிமிடத்தில் எங்கள் தேர்தல் அறிக்கையை வழங்கச்சொல்வது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று கூறினார்.

பேச்சு சுதந்திரம் கேட்பது தங்கள் ஜனநாயக உரிமை என்றும், 10 நிமிடத்தை நேர நிர்ணயம் செய்து தங்களுக்குப் பிச்சை போடவேண்டாம் என்றும் அரசாங்கத்தை அவர் வன்மையாக கண்டித்தார்.

தாங்கள் வேண்டுவது பொதுத் தேர்தல் நேரத்தில் மட்டுமன்றி, எல்லா நேரத்திலும் பதில் சொல்லும் உரிமையையே என்றும் லிம் தெரிவித்தார்.

தாம் பிகேஆர் மூத்த தலைவர் அன்வாருடன், தமது இந்த 10நிமிட நேர நிர்ணய நிராகரிப்பைப் பற்றி தொடர்பு கொள்ளப் போவதாகவும், ஏற்கனவே பாஸ் துணைத்தலைவர் முகமட் சாபு, தமது கருத்துகளை ஏற்றுக்கொண்டதாகவும் லிம் தெரிவித்தார்.