Home உலகம் ஷங்காய் நடைபாதையில் பாய்ந்த வாகனம் – 18 பேர் காயம்

ஷங்காய் நடைபாதையில் பாய்ந்த வாகனம் – 18 பேர் காயம்

851
0
SHARE
Ad

china-shanghai-van-pedesterians-02022018ஷங்காய் – பொதுமக்கள் அதிக நடமாட்டம் கொண்ட நடைபாதையில் வேன் போன்ற வாகனம் ஒன்று நுழைந்து பாதசாரிகளை மோதித் தள்ளியதில் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மூவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

ஷங்காய் நகரில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. மோதல் நடந்த பின்னர் காரில் இருந்து சிறிய அளவிலான நெருப்பு ஏற்பட்டது. எனினும் தீயணைப்புப் படையினர் நெருப்பை அணைத்தனர்.

#TamilSchoolmychoice

எனினும் இது இயல்பான விபத்தா அல்லது பயங்கரவாதச் செயலா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.