Home உலகம் சீனாவில் சாலையில் தோன்றிய மிகப் பெரிய பள்ளம் – 8 பேர் பலி!

சீனாவில் சாலையில் தோன்றிய மிகப் பெரிய பள்ளம் – 8 பேர் பலி!

830
0
SHARE
Ad

China Sinkholeபோசான் – சீனாவின் போசான் நகரில் இரயில் நிலையம் ஒன்றின் அருகே நேற்று புதன்கிழமை, சாலையில் தோன்றிய திடீர் பள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியாகியதோடு, மேலும் மூவரைக் காணவில்லை.

சுமார் இரண்டு கூடைப்பந்து மைதானம் போல் இருக்கும் அந்த மிகப் பெரிய பள்ளம் 5 அல்லது 6 மீட்டர் ஆழம் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பள்ளம் ஏற்பட்ட சாலையில் அருகே நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளின் போது, ஏற்பட்ட நீர்கசிவே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது.