Home நாடு இந்திரா காந்தி விவகாரம்: முஸ்லிம்களுக்கு மகாதீர் முக்கிய அறிவுரை!

இந்திரா காந்தி விவகாரம்: முஸ்லிம்களுக்கு மகாதீர் முக்கிய அறிவுரை!

1332
0
SHARE
Ad

MAHATHIR_MOHAMED - 1புத்ராஜெயா – இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்ற விவகாரத்தில் முன்னாள் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, முக்கியக் கருத்து ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு மத நல்லிணக்கத்தைப் பேணும் படி முஸ்லிம்களுக்கு மகாதீர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

மலேசிய முஸ்லிம் நல்வாழ்வு அமைப்பின் முன்னாள் தலைவருமான மகாதீர், “நீதிமன்றத்தின் முடிவை நான் கேட்டோம். பிள்ளைகளின் மதமாற்றத்திற்குப் பெற்றோர்கள் இருவரது ஒப்புதலும் தேவை.”

#TamilSchoolmychoice

“நம்மில் சிலருக்கு அந்தத் தீர்ப்பை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள இயலாமல் இருக்கலாம். இஸ்லாமுக்கு முன்னுரிமை கொண்ட திடமான நடவடிக்கை நமக்குத் தேவையாக இருக்கலாம். என்றாலும் பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், சில முடிவுகளை எடுக்கும் போது மதநல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் யோசித்து தான் எடுக்க வேண்டும். எனவே நம்மால் மாற்ற முடியாத விசயங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையின் 58-வது ஆண்டுக் கொண்ட்டாத்தில் பேசிய மகாதீர் தெரிவித்தார்.

தனது சம்மதம் இன்றி பிள்ளைகள் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி, கடந்த 9 ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி நடத்தி வந்த போராட்டம் கடந்த ஜனவரி 29-ம் தேதி வெற்றிகரமாக ஒரு முடிவுக்கு வந்தது.

அவரது மேல் முறையீட்டை விசாரித்த கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் (பெடரல் கோர்ட் ) இந்திரா காந்தியின் 3 பிள்ளைகளும் ஒரு தலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.