Home நாடு உருமாற்றத்தில் மகாதீர் உறுதியாக இருக்கிறார் – அன்வார் நம்பிக்கை!

உருமாற்றத்தில் மகாதீர் உறுதியாக இருக்கிறார் – அன்வார் நம்பிக்கை!

1028
0
SHARE
Ad

Anwar Mahathirகோலாலம்பூர் – முன்னாள் ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகபி போல் துன் டாக்டர் மகாதீர் முகமது இருக்கப் போவதில்லை என்றும், உருமாற்றத்தைக் கொண்டு வர மகாதீர் உறுதியாக இருக்கிறார் என்றும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

இது குறித்து கோலாலம்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், “பக்காத்தான் ஹராப்பானின் தலைவரான மகாதீர், எதிர்கட்சிக் கூட்டணியின் உருமாற்றத் திட்டத்தை ஏற்று அதில் உறுதியாக இருக்கிறார். அவர் தனது பழைய வழிக்குச் சென்றுவிடுவாரோ என அஞ்ச வேண்டாம்” என்று தெரிவித்தார்.

மேலும், மாற்றத்திற்கு மகாதீர் தயாராகி வருவதாகவும், இந்த அரசாங்கத்தால் அவர் அதிகமான அவஸ்தைகளை அடைந்துவிட்டார் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.