Home இந்தியா தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு!

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு!

1214
0
SHARE
Ad

Jayalalithaசென்னை – தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திங்கட்கிழமை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது.

உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, படம் திறப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவே தனக்கு நேரடியாக ஆசீர்வாதம் வழங்கியது போல் தான் உணர்வதாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில், 37 தொகுதிகளில் வென்று, இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கியவர் ஜெயலலிதா. அதுமட்டுமின்றி, பெண்களின் உரிமையை பாதுகாத்தவர், காவிரியை மீட்டு கொடுத்தவர் என ஜெயலலிதாவின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றும் பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

முன்னதாக, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால், அவரது படத்தை திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், தே.மு.தி.க., இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.