Home நாடு 350 ரிங்கிட்டுக்கு மலேசிய அடையாள அட்டை வாங்கிய தீவிரவாதிகள்: அறிக்கை தகவல்!

350 ரிங்கிட்டுக்கு மலேசிய அடையாள அட்டை வாங்கிய தீவிரவாதிகள்: அறிக்கை தகவல்!

1142
0
SHARE
Ad

ICFrontகோலாலம்பூர் – பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் 350 ரிங்கிட்டுக்கு போலி மலேசிய அடையாள அட்டையை வாங்கி, மலேசியாவிற்குள் நுழைவதாக அறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து ‘தி நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், இது போன்று போலி மலேசிய அடையாள அட்டைகளை மலிவு விலைக்கு வாங்கும் தீவிரவாதிகள், சபா மற்றும் தீபகற்ப மலேசியாவிற்குள் எளிதில் நுழைந்து, அங்கு பாதுகாவலர் பணிகள் உள்ளிட்ட பணிகளில் சேர்வதாகவும் கூறுகின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த டாஹ்வான் என்ற 22 வயது சந்தேக நபர் சபாவில் 1000 ரிங்கிட் கொடுத்து, போலி மலேசிய அடையாள அட்டையை வாங்கியதாகவும், அதேபோல் நூர்ஹான் சாஹி ஹாக்கிம் என்ற 33 வயதான நபர், 350 ரிங்கிட் கொடுத்து மலேசிய அடையாள அட்டை வாங்கியதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice