Home நாடு இரகசிய கேமரா காட்சிகள்: வசந்தபிரியா வழக்கில் புதிய திருப்பம்!

இரகசிய கேமரா காட்சிகள்: வசந்தபிரியா வழக்கில் புதிய திருப்பம்!

1181
0
SHARE
Ad

Vasanthapriyaநிபோங் திபால் – மாயமான ஆசிரியரின் ஐபோனை வசந்தபிரியா தான் எடுத்தார் என்பதற்கு ஆதாரமாக இரகசியக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கிடைத்திருப்பதாக பெரித்தா ஹரியான் இணையதளம் செய்தி வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை காவல்துறையும் உறுதிபடுத்தியிருப்பதோடு, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை முடியும் வரை, தகவல்களை வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மாணவி வசந்தபிரியா ஐபோனை எடுத்திருப்பதை இரகசியக் கண்காணிப்புக் கேமரா காட்சிகளில் பார்த்துவிட்டு தான் சம்பந்தப்பட்ட ஆசிரியை, மாணவியை அழைத்து விசாரணை செய்திருக்கிறார் என்றும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

பினாங்கிலுள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 14 வயது மாணவி வசந்தபிரியா, தனது வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை முயற்சி செய்தார்.

எனினும், பெற்றோரால் உடனடியாகக் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவடைந்த நிலையில், செயற்கை சுவாசக் கருவியின் மூலம் செபராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வசந்தபிரியா மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.