மாஸ்கோ – ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அருகே, சரதோவ் ஏர்லைன்சைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 71 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் 65 பயணிகளும், 6 பணியாளர்களும் மரணமடைந்துவிட்டதாக ரஷியாவின் போக்குவரத்து விசாரணை அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
மாஸ்கோ டோமோடேடோவோ விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட 4 நிமிடங்களிலேயே அந்த விமானம் ரேடாரில் இருந்து விலகி விபத்திற்குள்ளானதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்திருக்கிறார்.
விமானம் விழுந்து நொறுங்கும் கொடூரக் காட்சி அங்கிருந்த இரகசியக் கேமரா ஒன்றில் பதிவாகியிருக்கிறது. அது தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது: