Home 13வது பொதுத் தேர்தல் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படாது – காலிட்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படாது – காலிட்

722
0
SHARE
Ad

Abdul Khalid Ibrahimகோலாலம்பூர், மார்ச் 27- சிலாங்கூர் மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படக் கூடும் என்று கடந்த சில நாட்களாக சிலாங்கூர் மாநில அரசியல் வட்டாரங்களில் செய்தி பரவி வந்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பாக சிலாங்கூர் சட்டமன்றம் கலைவதற்கான சாத்தியம் இல்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஸ்ரீ காலிட் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மக்கள் கூட்டணியின் ஆட்சிக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காலிட்,

“சிலாங்கூர் மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுமா என்று மக்களிடம் நிலவி வரும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவே நான் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். நாடாளுமன்றம் இன்னும் கலைக்கப்படாத நிலையில் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றம் வருகிற ஏப்ரல் 28  ஆம் தேதி தானாக கலைவதற்கு முன்பாகவே, ஏப்ரல் 22 ஆம் தேதியோடு சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைந்துவிடும் ” என்றார்.

#TamilSchoolmychoice

மேலும், மக்கள் கூட்டணியின் மற்ற மாநில சட்டமன்றங்களையும் அதே தேதியில்( ஏப்ரல் 22) கலைக்க அவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், இன்னும் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும்  காலிட் தெரிவித்தார்.