Home நாடு பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவராக, அஸ்மின் அலி ஆதரவாளர் ஹில்மான் வெற்றி!

பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவராக, அஸ்மின் அலி ஆதரவாளர் ஹில்மான் வெற்றி!

213
0
SHARE
Ad
(இடது) ஹில்மான் இடாம்-அக்மால் சாஹின்

கோலாலம்பூர் : பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதிக்கான தலைவர் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மான் இடாம் வெற்றி பெற்றார். இவர் அஸ்மின் அலியின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படுபவர். இந்த வெற்றியின் மூலம் கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் அஸ்மின் அலியின் ஆதிக்கம் கட்சியில் மேலோங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவருக்குப் போட்டியிட்ட இளைஞர் பகுதியின் முன்னாள் நிரந்தரத் தலைவர் அக்மால் சாஹின் சைனால் சாஹிர் தோல்வியடைந்தார்.

ஹில்மானுக்கு 1,888 வாக்குகள் கிடைத்த நிலையில் சாஹினுக்கு 1,718 வாக்குகள் கிடைத்தன. 170 வாக்குகள் பெரும்பான்மையில்தான் ஹில்மான் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து கட்சியின் நடப்பு தலைவரான மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமட் பைசால் வான் அகமட் கமால் தனது பதவியைத் தற்காக்க மீண்டும் போட்டியிடவில்லை. அவர் எதிர்வரும் கட்சித் தேர்தலில் மத்திய செயற்குழுவுக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


செல்லியல் வாட்ஸ்எப் புலனத்தில் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் இணைந்து செல்லியல் செய்திகளைத் தொடர்ந்து உடனுக்குடன் வாட்ஸ்எப் செயலியில் பெறுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaAixyV60eBcwp8dkW2r