கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை அக்டோபர் 26-ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர், மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரா அவர்களின் 80-வது பிறந்த நாளை நினைவு கூரும் பொருட்டும், அவரின் நண்பர்களும் ஆதரவாளர்களும் ஜாலான் ஈப்போ, செந்தூல், கோலாலம்பூரிலுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் பிரார்த்தனையும் சிறப்புப் பூஜைகளும் நடத்தினர்.
அபிஷேகம், சண்முகா அர்ச்சனை, ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட இந்தப் பிரார்த்தனையில் டான்ஶ்ரீ சுப்ராவின் குடும்பத்தினரும், நண்பர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
சிறப்புப் பூஜைக்குப் பின்னர் செந்துல் செட்டியார்கள் மண்டபத்தில் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டான்ஶ்ரீ சுப்ரா குடும்பத்தினருடன் டான்ஶ்ரீ குமரன், டத்தோ சுப்ரா ரத்னவேலு, மக்கள் ஓசை நிர்வாக இயக்குநர் டத்தோ எஸ்.கோபாலகிருஷ்ணன், திருமதி சரோஜினி ரூத், நேசா கூட்டுறவு சங்க இயக்குநர் வாரியத் தலைவர் டத்தோ சசிகுமார் பழனியப்பன், ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன், இரா.மாசிலாமணி, டத்தோ வீ.நடராஜன், செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமரர் டான்ஸ்ரீ சி.சுப்ரா : வாழ்நாள் முழுக்க நண்பர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்ந்தவர்!