Home நாடு குளியலறையில் வழுக்கி விழுந்தார் கிட் சியாங் – லேசான காயம்!

குளியலறையில் வழுக்கி விழுந்தார் கிட் சியாங் – லேசான காயம்!

847
0
SHARE
Ad

கேலாங் பாத்தா – ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் நேற்று வியாழக்கிழமை இரவு தனது கேலாங் பாத்தா இல்லத்தில், குளியலறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்த மருந்தகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கிட் சியாங், காயத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் இரவே வீடு திரும்பினார்.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதாக இருந்த லிம் கிட் சியாங், அவை அனைத்தையும் இரத்து செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice