Home வணிகம்/தொழில் நுட்பம் ஏப்ரல் 15-ம் தேதியோடு ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது!

ஏப்ரல் 15-ம் தேதியோடு ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது!

1039
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வந்த ஏர்செல், 155 பில்லியன் ரூபாய் (2.38 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனில் சிக்கியது.

அதனை சரி செய்ய அந்நிறுவனம் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவை கைகொடுக்காததால், இறுதியில் திவாலானது.

ஏர்செல் நிறுவனம் திவாலானதை, தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராயும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து வரும் ஏப்ரல் 15-ம் தேதியோடு இந்தியா முழுவதும் உள்ள ஏர்செல் சேவை நிறுத்தப்படும் என்றும், அதற்குள் ஏர்செல் வாடிக்கையாளர் அதே எண்ணில் வேறு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, ஏர்செல் நிறுவனத்தின் 74 விழுக்காடு பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் கொம்யுனிகேஷன்ஸ் கொண்டிருக்கிறது. மேக்சிஸ் நிறுவனத்தில்,மலேசியாவின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராகக் கருதப்படும் ஆனந்த கிருஷ்ணன் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கிறார்.

ஏர்செல் திவாலானதால், ஆனந்த கிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை எதிர்நோக்கக் கூடும் என வணிக ஊடகங்கள் கணித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.