புதுடெல்லி – ஏர்செல் நிறுவனம், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் திவாலானதையடுத்து, வரும் ஏப்ரல் 15-ம் தேதியோடு அதன் சேவை நிறுத்தப்படும் என்றும், அதற்குள் வாடிக்கையாளர்கள் அனைவரும் வேறு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் படியும் தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும் வேறு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மாறும் வரை, ஏர்செல் தனது சேவையைத் தொடர வேண்டுமென வாடிக்கையாளர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.
இவ்வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், இன்னும் ஒரு வாரத்திற்குள் டிராய், ஏர்செல் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு இலாகா ஆகியவை இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.