Home கலை உலகம் ஆஸ்கார்’90 – விருதளிப்பு மேடையில் ஸ்ரீதேவி, சசி கபூருக்கு அஞ்சலி

ஆஸ்கார்’90 – விருதளிப்பு மேடையில் ஸ்ரீதேவி, சசி கபூருக்கு அஞ்சலி

1379
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்க நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை) நடைபெற்று முடிந்த 90-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் மறைந்த இந்திய நட்சத்திரங்கள் ஸ்ரீதேவி, சசிகபூர் ஆகியோருக்கு அஞ்சலி மேடையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஆஸ்கார் விருதளிப்பு மேடையில் கடந்து போன ஆண்டில் மறைந்த ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் மேடையில் உள்ள திரையில் காட்டப்பட்டு, மேடையில் பாடகர் ஒருவர் உருக்கமான பாடல் ஒன்றைப் பாடி மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி மரியாதை செலுத்துவார்.

அதே போன்று இந்த ஆண்டும் அஞ்சலிப் பாடல் மேடையில் இசைக்கப்பட்டு, பாடகர் ஒருவர் பாடிக் கொண்டிருக்க, பிரம்மாண்ட மேடையின் பின்னணியில் மறைந்த நட்சத்திரங்களில் புகைப்படங்கள் காட்டப்பட்டன. அந்த வரிசையில் அண்மையில் மறைந்த ஸ்ரீதேவியின் புகைப்படமும், பின்னர் இந்தி நடிகர் சசி கபூரின் புகைப்படமும் காட்டப்பட்டது.