Home நாடு “எனக்கு 29 வயது தான்” – டுவிட்டரில் மகாதீர், விவேக் சுவாரசிய உரையாடல்!

“எனக்கு 29 வயது தான்” – டுவிட்டரில் மகாதீர், விவேக் சுவாரசிய உரையாடல்!

1491
0
SHARE
Ad
கடந்த ஆண்டு மகாதீரை, நடிகர் விவேக் நேர்காணல் செய்த போது எடுத்த படம்

கோலாலம்பூர் – புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி, சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் நடிகர் விவேக்.

மரம் நடுவதை தனது வாழ்நாள் சேவையாக வைத்து கொண்டிருப்பவர். காலஞ்சென்ற விஞ்ஞானியும், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாமை பல முறைச் சந்தித்துப் பேட்டி கண்டவர்.

இந்நிலையில், நடிகர் விவேக் அண்மையில் மலேசியாவிற்கு வருகை புரிந்த போது, மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரைச் சந்தித்துப் பேட்டி கண்டார்.

#TamilSchoolmychoice

மகாதீரின் மீது அளவுகடந்த மரியாதை கொண்டிருக்கும் விவேக், நேற்று தனது டுவிட்டரில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அக்காணொளியில், மகாதீர் நடந்து செல்வது போலவும், மக்களிடம் கைகுலுக்குவது போலவும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

“முன்னாள் பிரதமர் மற்றும் நவீன மலேசியாவை உருவாக்கியவருமான டாக்டர் மகாதீரின் ராஜநடையைப் பாருங்கள். அவரது வயது 94 மட்டுமே” என்று விவேக் குறிப்பிட்டிருந்தார்.

விவேக்கின் இந்தப் பதிவிற்கு டுவிட்டரில் பதிலளித்திருக்கும் மகாதீர், “நன்றி.. எனது வயதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எனக்கு 29 வயது மட்டுமே” என்று கிண்டலாகத் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் மகாதீருக்கு தற்போது 92 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விவேக் வெளியிட்டிருக்கும் காணொளி:

விவேக்கிற்குப் பதிலளித்து துன் மகாதீர் தனது டுவிட்டர் வெளியிட்ட பதிவு: