Home இந்தியா “பெரியார் சிலை மீது கை வைத்துப் பாருங்கள்” – எச்.ராஜாவுக்கு முக்கியத் தலைவர்கள் சவால்!

“பெரியார் சிலை மீது கை வைத்துப் பாருங்கள்” – எச்.ராஜாவுக்கு முக்கியத் தலைவர்கள் சவால்!

1178
0
SHARE
Ad

சென்னை – திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல், நாளை தமிழகத்தில் சாதி வெறியர் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எச்.ராஜாவுக்கு சுபவீரபாண்டியன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துத் தெரிவித்து வரும் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமெனக் கோரி நாளை புதன்கிழமை பெரியார் சிலை முன்பு போராட்டம் நடத்தவிருப்பதாகவும் சுபவீரபாண்டியன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.