Home உலகம் காத்மாண்டுவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

காத்மாண்டுவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது!

1084
0
SHARE
Ad

காத்மாண்டு – நேபாளத் தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் அருகே இன்று திங்கட்கிழமை மதியம் வங்காளதேச விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த 67 பயணிகள், 4 பணியாளர்களில், தற்போது 17 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

மதியம் 2.20 மணியளவில், அவ்விமானம் தரையிறங்க முயற்சி செய்த போது திடீர் கோளாறு காரணமாக, அருகில் இருந்த காற்பந்தாட்ட மைதானத்தில் விழுந்து நொறுங்கியதாக விமான நிலைய அறிக்கை கூறுகின்றது.