Home இந்தியா குரங்கனி தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

குரங்கனி தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

1446
0
SHARE
Ad

குரங்கனி – தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், அப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்த சென்னை, கோவை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் சிக்கிக் கொண்டனர்.

இவர்களில் 8 பேர் தீயில் கருவி இறந்த நிலையில், எஞ்சியவர்களை மீட்ட மீட்புக்குழுவினர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.

இந்நிலையில், அவர்களில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருக்கிறது.