குரங்கனி – தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில், அப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்த மாணவ, மாணவிகள் உட்பட 39 பேர் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் உள்ளூர்வாசிகளின் உதவியோடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 28 பேர் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், 28 பேரில் 10 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.