Home இந்தியா குரங்கனி தீ விபத்து: பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது!

குரங்கனி தீ விபத்து: பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது!

1282
0
SHARE
Ad

மதுரை – குரங்கனி தீவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்திருக்கிறது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதுடையவர்கள். அவர்களில் சிலர் பட்டமேற்படிப்புப் முடித்து தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நல்ல நிலையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தீவிபத்தில், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்தவர்கள், சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சாய்வசுமதி (வயது 26), மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சென்னையைச் சேர்ந்த நிவ்யா பிரகதி (வயது 24) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை இறந்தனர்.

சாய்வசுமதி சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நிவ்யா பிரகதி எம்பிஏ பட்டதாரி.

இவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததையடுத்து, இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்திருக்கிறது.