Home இந்தியா அப்பல்லோ தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு!

அப்பல்லோ தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு!

888
0
SHARE
Ad

சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற, பிரபல அப்பல்லோ மருத்துவமனையின் குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவருக்கு, ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.