Home நாடு ஆர்டிஎம் 72-ம் ஆண்டுக் கொண்டாட்டம்: மின்னல் எஃப்எம் ஏற்பாட்டில் இசை நிகழ்ச்சி!

ஆர்டிஎம் 72-ம் ஆண்டுக் கொண்டாட்டம்: மின்னல் எஃப்எம் ஏற்பாட்டில் இசை நிகழ்ச்சி!

914
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆர்டிஎம்மின் 72-ம் ஆண்டு வரலாற்றுப் பிறந்தநாளையொட்டி மின்னல் எஃப்எம் உள்ளூர் கலைஞர்களோடு இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

வரும் மார்ச் 31 -ம் தேதி சனிக்கிழமை மாலை மணி 5 தொடங்கி, இரவு மணி 8 வரை, ஜாலான் மெலாத்தி, புக்கிட் பெருந்துங், பப்ளிக் வங்கி அருகே, நடைபெறவிருக்கிறது.

மின்னல் எஃப்எம் அறிவிப்பாளர்களோடு உள்ளூர் கலைஞர்கள் ஷாமினி , சித்தார்த்தன், குமரேஷ், நாராயணி, ஷர்மிளா சிவகுரு, காயத்திரி தண்டபாணி , சிவகாந்தன், சைக்கோ யுனிட் ஷீஜே, ரேபிட் மேக், முகேன் ராவ் , மில்லேனியம் ஆர்ட்ஸ் குழுவினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஆடல் பாடல் கொண்டாட்டத்தோடு நிகழ்ச்சி நடைபெறுவதோடு மட்டுமல்லாது அங்கு அரசு கூடாரங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.பொதுமக்கள் அவர்களது சேவைகளை நேரடியாக பெறலாம்.