Home நாடு பாக்ரி தொகுதியில் ஜசெகவின் இயோ பீ யின் போட்டி

பாக்ரி தொகுதியில் ஜசெகவின் இயோ பீ யின் போட்டி

943
0
SHARE
Ad
இயோ பீ யின் – பாக்ரி நாடாளுமன்ற ஜசெக வேட்பாளர்

மூவார் – சிலாங்கூரிலுள்ள டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினரான இயோ பீ யின் (Yeo Bee Yin) ஜோகூர் மாநிலத்திலுள்ள பாக்ரி நாடாளுமன்றத்திற்கான வேட்பாளராக இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டார். அவர் ஜோகூர் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராவார்.

தனது முக்கியத் தலைவர்களை ஜோகூர் மாநிலத்தில் களமிறக்கும் பொதுத் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, இயோ பீ யின் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடுவதை இன்று சனிக்கிழமை மூவார் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜசெக பொதுத் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்தார்.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் ஜசெக பாக்ரி தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு வந்துள்ளது. 2013 பொதுத் தேர்தலில் 5,067 வாக்குகளில் ஜசெகவின் இர் தெக் ஹூவா இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

பாக்ரி தொகுதியின் கீழ் பெந்தயான், சுங்கை அபோங், புக்கிட் நானிங் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் பெந்தயான் தொகுதியில் ஜசெக மீண்டும் போட்டியிடுகிறது. அங்கு ஜோகூர் மாநில ஜசெக அமைப்புச் செயலாளர் இங் யாக் ஹோவி போட்டியிடுகிறார். பெந்தயான் தொகுதியிலும் ஜசெக கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

2013 புள்ளிவிவரங்களின்படி பாக்ரி தொகுதியில் சீனர்கள் 53 விழுக்காடும், மலாய்க்காரர்கள் 44 விழுக்காடும், இந்தியர்கள் 2 விழுக்காடும் இருக்கின்றனர். மற்றவர்கள் 1 விழுக்காடு இருக்கின்றனர்.