Home இந்தியா குரங்கனி தீ விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

குரங்கனி தீ விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

1237
0
SHARE
Ad

மதுரை – குரங்கனி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இத்தீவிபத்தில் சிக்கிய திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா என்பவருக்கு, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த அன்று 8 பேர் மரணமடைந்தனர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அதன் பின்னர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானவர்கள், அபாய கட்டத்தில் இருந்தவர்கள் சிலர் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர் .

#TamilSchoolmychoice

நேற்று வியாழக்கிழமை ஒருவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.