Home நாடு போட்டி பாகோவிலா? மூவாரிலா? – விரைவில் மொகிதின் அறிவிப்பார்!

போட்டி பாகோவிலா? மூவாரிலா? – விரைவில் மொகிதின் அறிவிப்பார்!

902
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், தான் போட்டியிடப்போகும் தொகுதி குறித்து, பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின், மிக விரைவில் அறிவிப்பதாய் தெரிவித்திருக்கிறார்.

14-வது பொதுத்தேர்தலில் மொகிதின் தனது நடப்புத் தொகுதியான பாகோவில் போட்டியிடாமல் மூவாரில் போட்டியிடக்கூடும் என்ற ஆரூடங்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மதியம் பாகோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய மொகிதின், “இன்னும் ரொம்ப நாள் இல்லை. எனது முடிவு சரியான சந்தர்ப்பத்தில் அறிவிக்கப்படும். நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயாராக இருக்கிறேன். நான் ஒரு மூத்த தலைவர். என்றாலும், பாகோவில் நான் நீண்டகாலமாக போட்டியிட்டு வருகின்றேன். நிறைய பேர் அந்தத் தொகுதியையே தக்க வைக்கும்படி கூறுகின்றனர். எனவே நான் அதையும் மனதில் வைத்துக் கொள்கிறேன்” என்று மொகிதின் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice