Home கலை உலகம் மலேசிய கலைஞர்களின் சந்திப்போடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்!

மலேசிய கலைஞர்களின் சந்திப்போடு மின்னலின் மண்ணின் நட்சத்திரம்!

1058
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சி பிற்பகல் மணி 12 தொடக்கம் மின்னலில் ஒலியேறி வருகிறது.

மலேசிய பாடல்களின் சிறந்த ஜந்து பாடல்கள் தொகுப்பு, உள்ளூர் கலைஞர்களின் சந்திப்புகள், புத்தம் புதிய மலேசிய திரைப்படங்களின் வெளீயிடு என பல அங்கங்களை தாங்கி மலர்ந்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், இந்த வாரம், 9-வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் மலேசியக் கலைதுறைக்கு பெருமை தரக்கூடிய வகையில் விருது பெற்றிருக்கும் “தோட்டம்” திரையின் இயக்குனர் அரங்கணல் அவரின் சந்திப்பு ஒலியேறும்.

#TamilSchoolmychoice

தோட்டம் திரைப்படத்தின் சிறப்பு, விருது பெற்ற சுவாரசியமான அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொள்ள போகிறார். அதே வேளையில் கலைத்துறையின் முன்னோடியாக விளங்கும் லோக்காப் நாதன் அவரின் கலையுலக பயணம் குறித்தும், பல்கலைக்கழக மாணவர்களை கொண்டு பாடல் திறன் போட்டி நடத்திவரும் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துக் கொள்ள போகிறார்.

அதே நேரத்தில், சிறந்த 5 மலேசிய பாடல்களோடு இன்று மண்ணின் நட்சத்திரத்தில் உங்களை சந்திக்கிறார் அறிவிப்பாளர் ரவின்.

கலை வட்டார செய்திகள், கலைஞர்களின் படைப்புகளான குறுந்தட்டு வெளியீடு, திரைப்படம் வெளியீடு குறித்த தகவல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனை 03-22887497 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  மலேசிய கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”