Home நாடு மார்ச் இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – அறிக்கை தகவல்!

மார்ச் இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – அறிக்கை தகவல்!

953
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ நாடாளுமன்றத்தைக் கலைக்க வாய்ப்பு இருப்பதாக பெரித்தா ஹரியானும், நியூ ஸ்டெரெட்ஸ் டைம்ஸ் இணையதளமும் செய்தி வெளியிட்டிருக்கிறது.

தொகுதி எல்லை மாற்றங்களுக்கான தீர்மானம் வரும் மார்ச் 19 மற்றும் மார்ச் 26-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதால், நாடாளுமன்றம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் கலைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

இந்தத் தீர்மானம் தொடக்கத்தில் மார்ச் 29-ம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், பொதுத்தேர்தலுக்குத் தயாராகும் நோக்கில், இதனை முன்கூட்டியே தாக்கல் செய்ய தேசிய முன்னணி முடிவெடுத்திருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

இதனிடையே, தொகுதி எல்லை மாற்றங்கள், தேசிய முன்னணிக்குச் சாதகமாக அமைவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.