நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில் பேசிய அஸ்மின், மலேசியாவின் தேசியக் கடன் மீதான வட்டிக்காக அதிகரித்து வரும் செலவுகள், 1எம்டிபி விவகாரத்தாலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அவர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் போதே தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அஸ்மினைப் பேச விடாமல் கேலி செய்வதைப் போல் குரல் கொடுத்தனர்.
எனினும், அஸ்மின் கேள்வி எழுப்பியதும், பதிலளித்த பிரதமர் நஜிப், “சிலாங்கூர் தண்ணீர் நிறுத்தப் பிரச்சினை அதை விட அபாயகரமாக இருக்கின்றது” என்று தெரிவித்தார்.