Home உலகம் அமெரிக்க நிறுவனத்தின் உரிமையாளராகிறார் மலேசிய இந்தியப் பெண்!

அமெரிக்க நிறுவனத்தின் உரிமையாளராகிறார் மலேசிய இந்தியப் பெண்!

3715
0
SHARE
Ad

நியூயார்க் – பேராக் மாநிலம் கம்பாரில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவரான ரூபா ஷண்முகம், அமெரிக்காவில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் முன்னணி மின்னணு நிறுவனமான சோபார்க் கார்பரேசனின் (Sopark Corporation) உரிமையாளராகிறார்.

கடந்த 1981-ம் ஆண்டு, ராபர்ட் ஸ்டீவன்சன் என்பவரால் உருவாக்கப்பட்ட அந்நிறுவனத்தின் நடப்பு தலைவராகவும், தலைமைச் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வரும் ரூபா ஷண்முகம், இந்த ஆண்டு இறுதியில் அந்நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளுக்கு உரிமையாளராகவிருக்கிறார்.

கோலாலம்பூர் கூட்டரசு தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மின்னணுவியல் துறையில் தனது டிப்ளோமாவை முடித்த ரூபா, இயற்பியல் ஆசிரியரான தனது தந்தை அளித்த ஊக்கத்தில் தான் இத்துறையைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice