Home நாடு பக்காத்தான் – ஆர்ஓஎஸ் வழக்கு: ஏப்ரல் 5-ல் விசாரணை!

பக்காத்தான் – ஆர்ஓஎஸ் வழக்கு: ஏப்ரல் 5-ல் விசாரணை!

713
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கூட்டணிக்கு அனுமதி வழங்கவில்லையென சங்கங்களின் பதிவிலாகாவுக்கு (ஆர்ஓஎஸ்) எதிராக, பக்காத்தான் ஹராப்பான் தொடுத்திருக்கும் வழக்கு, தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி நாள் அன்று விசாரணைக்கு வருகின்றது.

கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டம் வரும் ஏப்ரல் 5-ம் தேதியோடு நிறைவடைகின்றது. அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் 5 அரசியல் தலைவர்கள் தொடுத்த இவ்வழக்கில் அவர்களின் பிரதிநிதியாக வழக்கறிஞர் மிச்சல் நங், வரும் ஏப்ரல் 5-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் ஆஜராகிறார்.

#TamilSchoolmychoice

இது குறித்து மிச்சல் நங், மலாய் மெயில் இணையதளத்திற்கு அளித்திருக்கும் தகவலில், “இவ்வழக்கு விசாரணையை மிக விரைவில் நடத்த வேண்டுமென்று நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். காரணம் தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. மேலும் வரும் ஏப்ரல் 5-ம் தேதி தான் நாடாளுமன்றமும் தனது கடைசி கூட்டத்தை நடத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.