Home இந்தியா மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் – ஸ்டாலின் அறிவிப்பு!

மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் – ஸ்டாலின் அறிவிப்பு!

1080
0
SHARE
Ad

சென்னை – காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதி வழங்காத பிரதமர் மோடிக்கு எதிராக, வரும் ஏப்ரல் 15-ம் தேதி அவர் தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஏப்ரல் 15-ம் தேதி மோடி தமிழகம் வருவதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அவர் இங்கு வரும் போது திமுக சார்பில் கருப்புக் கொடி காட்டுவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், வரும் ஏப்ரல் 1-ம் தேதி, திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.