Home கலை உலகம் அஸ்ட்ரோ வானவில்லில் ‘இது நம்ம பாட்டு லா’ புத்தம் புதிய நிகழ்ச்சி!

அஸ்ட்ரோ வானவில்லில் ‘இது நம்ம பாட்டு லா’ புத்தம் புதிய நிகழ்ச்சி!

1135
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய இசைத்துறையில் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் என எத்தனையோ கலைஞர்கள் வளர்ந்து வருகின்றார்கள்.

இந்நிலையில், மலேசிய இசைத்துறையும், இத்துறையில் சாதனைப் படைத்து வரும் கலைஞர்களைக் கொண்டாடும் வகையில், அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201, ‘இது நம்ம பாட்டு லா’ எனும் புத்தம் புதிய இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது.

13 அத்தியாயங்கள் கொண்ட இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடக்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு அலைவரிசை 201-இல் ஒளியேறும்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும், இசைத்துறையில் சாதனைப் படைத்து கொண்டிருக்கும் 13 கலைஞர்களின் நேர்காணல்கள் இடம்பெறும். இசைத்துறை எவ்வாறு தங்களுடைய வாழ்க்கைப் பாதை மாற்றியிருக்கிறது என்பதை இந்நிகழ்ச்சியில் போது 13 கலைஞர்களும் பகிர்ந்து கொள்வார்கள்.

பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட திலிப் வர்மன், ‘என்னை கொல்லாதே’ புகழ் இசையமைப்பாளர் ஜித்திஸ், அறிவிப்பாளர், பாடகர் மற்றும் நடிகருமான முகேன் ராவ், ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ இசையமைப்பாளர் ஷமேஷன் மணி மாறன், இசையமைப்பாளர் ஜெய் ராகவன், வினேஷ், பாடகர் ரேபிட் மேக், விக்கினேஸ் ஜெய், ஷேன் எஃதிரிம், டார்க்கி, புனிதா ராஜா, சைக்கோ மந்திரா மற்றும் ஹேவோக் பிரதர்ஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் வலம் வரவிருக்கிறார்கள்.

அதை வேளையில், ‘இது நம்ம பாட்டு லா’ நிகழ்ச்சியில் நம்முடைய உள்ளூர் இசைத்துறையின் வரலாறு மற்றும் வளர்ச்சி குறித்த தகவல்கள் கலைஞர்களின் நேர்காணல் வாயிலாக கலந்துரையாடப்படும். அதுமட்டுமின்றி, ‘unplugged’ இசை படைப்புகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறவிருக்கிறது.

கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், இந்நிகழ்ச்சியை ‘வெண்பா’ புகழ் மற்றும் இளம் இயக்குனருமான யுவராஜ், 360 பாகை நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் ஹேமா மற்றும் ஷேமி தொகுத்து வழங்குவார்கள்.

ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் மட்டுமின்றி அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக கண்டு களிக்கலாம்.

‘இது நம்ம பாட்டு லா’ நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my அகப்பக்கத்தை வலம் வருங்கள்.