Home தேர்தல்-14 நஜிப்பை பிரதமராக்கியது தான் நான் செய்த பெரும் தவறு: மகாதீர்

நஜிப்பை பிரதமராக்கியது தான் நான் செய்த பெரும் தவறு: மகாதீர்

1204
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதமராக்கியது தான், வாழ்வில் தான் செய்த பெரும் தவறு என முன்னாள் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

டேசா பாண்டானில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மகாதீர், அங்கு கூடியிருந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது தவறுக்காக மன்னிப்புக் கேட்டார்.

“என்னுடைய வாழ்வில் நான் செய்த மிகப் பெரிய தவறு நஜிப் அப்துல் ரசாக்கைத் தேர்ந்தெடுத்தது தான் (பிரதமராக).

#TamilSchoolmychoice

“தற்போது நான் அந்தத் தவறை சரி செய்வதற்காகக் கடுமையாக உழைத்து வருகின்றேன்” எனத் தெரிவித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், மழைச் சாரலையும் பொருட்படுத்தால், “எங்களது துன் வேண்டும், அவரை நாங்கள் நேசிக்கிறோம். அவர் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்” எனக் கோஷமிட்டனர்.

தித்திவாங்சா நாடாளுமன்றத் தொகுதியில், 14-வது பொதுத்தேர்தலில், பெர்சாத்து சார்பில் பெண் வேட்பாளர் ரீனா ஹாருன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அம்னோ வேட்பாளர் ஜோஹாரி அப்துல் கானி போட்டியிடுகிறார். ஜோஹாரி தித்திவாங்சா தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதோடு, காபந்து நிதியமைச்சருமாவார்.

இதனிடையே, பாஸ் கட்சி சார்பில் முகமது நூர் முகமதும் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

13-வது பொதுத்தேர்தலில், தித்திவாங்சா தொகுதியில் 866 வாக்குகள் பெரும்பான்மையில் ஜோஹாரி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.