Home தேர்தல்-14 “மகாதீருக்கு வாக்களிக்காதீர்; அவர் ஓய்வு பெறட்டும்” – லங்காவி மக்களுக்கு ஹாடி வலியுறுத்து!

“மகாதீருக்கு வாக்களிக்காதீர்; அவர் ஓய்வு பெறட்டும்” – லங்காவி மக்களுக்கு ஹாடி வலியுறுத்து!

1045
0
SHARE
Ad
Hadi Awang PAS President
பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி ஹாடி அவாங்

கோலாலம்பூர் – லங்காவி மக்கள், துன் டாக்டர் மகாதீர் முகமதுவை நேசிப்பதாக இருந்தால், அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என பாஸ் தலைவர் அப்துல் ஹாஜி ஹாடி அவாங் கூறியிருக்கிறார்.

“நீங்கள் மகாதீரை நேசிக்கும் பட்சத்தில், அவருக்கு வாக்களிக்காதீர்கள், அவர் ஓய்வெடுக்கட்டும், அவர் தனது கடைசி நாட்களை அமைதியாகக் கழிக்கட்டும், மீண்டும் பிரதமராக வேண்டாம்” என குவா பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஹாடி தெரிவித்திருக்கிறார்.

மேலும், லங்காவியில் வயதான மறுசுழற்சி வேட்பாளருக்குப் பதில், புதியதாக இளம் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஹாடி வலியுறுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice