Home தேர்தல்-14 தொகுதி வலம்: பாகான் டாலாம் – “சேவையின் வழி தினகரன் வெற்றி வாகை சூடுவார்!” டி.மோகன்...

தொகுதி வலம்: பாகான் டாலாம் – “சேவையின் வழி தினகரன் வெற்றி வாகை சூடுவார்!” டி.மோகன் நம்பிக்கை

1045
0
SHARE
Ad

பாகான் டாலாம் – பினாங்கு மாநிலத்தில் மஇகா போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் பாகான் டாலாம் மற்றும் பிறை ஆகியவையாகும். இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளராகவும், கெடா மாநிலத்திற்குப் பொதுத் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன்.

அந்தப் பொறுப்பை ஏற்றது முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி பினாங்கிலேயே தங்கி மஇகா போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரத்தில் தனது குழுவினருடன் இறங்கியுள்ளார் டி.மோகன்.

சந்திப்புக் கூட்டங்கள் நடத்துவதோடு, பாகான் டாலாம் தொகுதியில் வீடு வீடாகச் சென்றும் வாக்காளர்களைச் சந்தித்து வருகிறார் டி.மோகன்.

ஜெ.தினகரன் – பாகான் டாலாம் வேட்பாளர்

#TamilSchoolmychoice

மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் மிபா எனப்படும் மலேசிய இந்திய காற்பந்து சங்கத்தின் துணைத்தலைவருமான ஜெ.தினகரன் பாகான் டாலாமில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கட்சியிலும், சமுதாயத்திலும் பல முனைகளிலும் சேவையாற்றி வரும் தினகரன், விளையாட்டுத் துறையிலும் தீவிர ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார். இவரது வெற்றிக்கு, பினாங்கு மஇகாவினர் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

காரணம், பாகான் டாலாம் சாதாரண தொகுதியல்ல! பாகான் நாடாளுமன்றத்தின் கீழ்வரும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பாகான் டாலாம். பாகான் நாடாளுமன்றத்தில் போட்டியிடுபவரும் சாதாரணமானவர் அல்ல!

விளக்கொளியில் மின்னும் வண்ணம் வாகனத்தில் பொருத்தப்பட்ட ஜெ.தினகரனின் வித்தியாச பதாகை

பினாங்கு முதல்வரும், ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங்தான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக இங்கே போட்டியிடுகிறார். ஜசெக சார்பில் பாகான் டாலாம் தொகுதியில் சதீஸ் முனியாண்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் பாகான் டாலாம் தொகுதியில் கடுமையான போட்டி நிலவினாலும் தினகரனின் சேவைகள் இவருக்கு வெற்றியைத் தேடித்தருமென டி.மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

டி.மோகனின் பிரச்சாரக் குழுவினர்

இந்த தொகுதியில் மாற்றம் வேண்டுமென்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் அதன் அடிப்பைடையில் ஜெ.தினகரன் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் மோகன் கூறுகிறார்.

பாகான் டாலாமில் தனது போட்டி குறித்து கருத்துரைத்த ஜெ.தினகரன், “மஇகாவின் தேசியத்லைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தொகுதியில் ஒருங்கிணைப்பாளராக எனது சேவையைப் பிரதிபலித்தேன். அதனையடுத்து இங்கு போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மஇகா, தேசிய முன்னணி வெற்றிக்காகவும், இந்த தொகுதி மக்களுக்காகவும் கடுமையாக உழைப்பேன்” என்றார்.

இந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறார் டி.மோகன். “பாகான் டாலாம்  தொகுதியைப் பொறுத்தவரையில் ஜெ.தினகரன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.அவரது சேவை இனம், மதம், மொழி கடந்து அனைவரிடத்திலும் அமைந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

வீடு வீடாக சென்று தினகரனுக்கு வாக்கு சேகரித்து வரும் மோகன், “தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளையும், எதிர்கட்சியினரின் வெற்று வாக்குறுதிகளையும் மக்கள் உணர்ந்துள்ளர்கள். அதன் அடிப்படையில் இந்தத்தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் வெற்றியை நிலை நிறுத்தும்” என்றும் தெரிவித்தார்.