Home தேர்தல்-14 முன்கூட்டியே வாக்களித்தவர்களின் விழுக்காடு 83%! வாக்குகளும் முன்கூட்டியே எண்ணப்படுமா?

முன்கூட்டியே வாக்களித்தவர்களின் விழுக்காடு 83%! வாக்குகளும் முன்கூட்டியே எண்ணப்படுமா?

760
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை (5 மே) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையிலான காவல் துறை மற்றும் இராணுவத் துறை  அதிகாரிகளுக்கான வாக்களிப்பில் சுமார் 83 விழுக்காட்டினர் வாக்களித்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 278,590 பதிவு பெற்ற வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 83 விழுக்காட்டினர் சனிக்கிழமையன்று நாட்டின் பல பகுதிகளில் உள்ள 586 வாக்களிப்பு மையங்களில் வாக்களித்தனர்.

முன்கூட்டியே வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களில் 118,913 பேர் காவல் துறையினராவர். 159,677 பேர் இராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படைகளைச் சேர்ந்தவர்களாவர்.

#TamilSchoolmychoice

முன்கூட்டியே வாக்களித்தவர்களின் வாக்குகள் மே 9-ஆம் தேதிதான் எண்ணப்படுமா அல்லது முன்கூட்டியே எண்ணப்படுமா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, பாகான் டத்தோ தொகுதியில் முன்கூட்டியே வாக்களித்தவர்களின் வாக்குகளை உடனே எண்ணுவதற்கு  தேர்தல் அதிகாரிகள் முற்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.