கோலாலம்பூர் – ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு குற்றமற்றவர் என நிரூபித்த பின்னரே நிதியமைச்சராகப் பதவியேற்க முடியும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்திருக்கிறார்.
“எல்லா அமைச்சர்களும் அந்தந்தப் பொறுப்புகளுக்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
“சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு இருக்கும் பட்சத்தில், எங்களால் அவர்களை நியமனம் செய்ய முடியாது” என மகாதீர் தெரிவித்திருக்கிறார்.
மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் லிம் குவான் எங்கிற்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
என்றாலும், தன் மீதான வழக்கு காரணமாக அவர் இன்னும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.