Home தேர்தல்-14 சிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர்

சிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர்

1230
0
SHARE
Ad

ஷா ஆலாம் – நேற்று திங்கட்கிழமை சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் பதவியேற்ற 10 பேர் கொண்ட ஆட்சிக் குழுவில் மீண்டும் ஜசெகவின் கணபதி ராவ் இடம் பெற்றுள்ளார்.

கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினராக கணபதி ராவ், இரண்டாவது தவணையாக ஆட்சிக் குழு பொறுப்பில் தொடர்கிறார். பதவியேற்ற 10 சட்டமன்ற உறுப்பினர்களில், கணபதி ராவ் உட்பட டத்தோ தெங் சாங் கிம் (ஜசெக, பண்டார் பாரு கிளாங்) அமிருடின் ஷாரி (பிகேஆர், சுங்கை துவா) ஆகிய மூவருமே இரண்டாவது தவணையிலும் ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

இவர்களைத் தவிர மேலும் எழுவர் புதிதாக சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பின்வருமாறு:

  1. ஹனிசா முகமட் தல்ஹா (பிகேஆர் – லெம்பா ஜெயா)
  2. இங் ஸீ ஹான் (ஜசெக – கின்ராரா)
  3. டாக்டர் ஷாஹாருடின் படாருடின் (பிகேஆர் – ஸ்ரீ  செத்தியா)
  4. ஹீ லோய் சியான் (பிகேஆர் – காஜாங்)
  5. டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் (அமானா – ஸ்ரீ செர்டாங்)
  6. இசாம் ஹாஷிம் (அமானா-பண்டான் இண்டா)
  7. டத்தோ அப்துல் ரஷிட் அசாரி (பிரிபூமி – செலாட் கிளாங்)
#TamilSchoolmychoice

புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஹீ லோய் சியான் முன்பு பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்த முறை பெட்டாலிங் ஜெயா எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியை அவர் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு விட்டுக் கொடுத்து விட்டு, காஜாங் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டார். கடந்த தவணையில் காஜாங் சட்டமன்ற உறுப்பினராக வான் அசிசா இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

14 மே 2018-இல் பதவியேற்ற சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவினர் – சுல்தானுடன்

அமானா கட்சியைச் சேர்ந்த சித்தி மரியா கடந்த 2013 பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார். பின்னர் பாஸ் பிளவுகண்டபோது அமானா கட்சியில் இணைந்தார்.

2018 பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியை அமானா தலைவர் முகமட் சாபுவுக்கு விட்டுக் கொடுத்தார் சித்தி மரியா. முகமட் சாபுவும் மிகப் பெரிய பெரும்பான்மையில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்று தற்காப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.