Home கலை உலகம் சேவை வரி குறித்து பேச்சு வார்த்தை நடத்த நடிகர், நடிகைகள் டெல்லி பயணம்

சேவை வரி குறித்து பேச்சு வார்த்தை நடத்த நடிகர், நடிகைகள் டெல்லி பயணம்

783
0
SHARE
Ad

1d21a29a-05da-499a-a2b4-e25e690e06b81சென்னை,ஜன.19 சேவை வரி குறித்து நடிகர், நடிகைகளிடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, நடிகர், நடிகைகள் டெல்லி செல்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு 12.36 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இந்த சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய திரையுலகினர் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் சென்னை, வள்ளூவர் கோட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு சேவை வரிக்கு எதிரான தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், நடிகர், நடிகைகளிடம் சேவை வரி குறித்து பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த பேச்சு வார்த்தை நாளை மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. பட்ஜெட் குழு தலைவர் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர் ஷீலா சங்க்வான், மத்திய அரசு வருவாய் துறை செயலாளர் சுமீத்போஸ் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் சென்னையில் இருந்து இன்று காலை 6.40மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள்.