Home பொது பவானிக்கு ஆதரவாக இன்று பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போலீஸ் புகார் – ஆர்ப்பாட்டம்

பவானிக்கு ஆதரவாக இன்று பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போலீஸ் புகார் – ஆர்ப்பாட்டம்

948
0
SHARE
Ad

Bawani-Sharifah-Featureகோலாலம்பூர், ஜனவரி 19 – உத்தாரா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி கே.எஸ்.பவானிக்கு ஆதரவாக பல இந்திய அமைப்புக்களும், தனிநபர் குழுக்களும் இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும், இது குறித்து போலீஸ் புகாரும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பவானி-ஷரிபா ஆகிய இருவருக்கும் இடையில் நடைபெற்ற கருத்து மோதல், யூ டியூப் ஒளிநாடா வழியும், முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களின் மூலமாகவும் சுழல் முறையில் அசுர வேகத்தில் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது ஒரு தேசியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது,

இந்த விவகாரம் குறித்த விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் தொடர்ந்து பத்திரிக்கைகளிலும் இணையத் தளங்களிலும் பெருகி வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்று நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் பல இந்திய அமைப்புக்களும், தனிநபர் குழுக்களும் இன்று பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஒன்று கூடி பவானிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கின்றனர். போலீஸ் புகாரும் செய்யவிருக்கின்றனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பவானி இதனை ஒரு இனப் பிரச்சனையாக பார்க்க வேண்டாம் என்றும் மாறாக அனைவருக்கும் இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்கான போராட்டமாக இந்த விவகாரம் உருமாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.