Home கலை உலகம் சந்தானம் – பவர் ஸ்டார் கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது

சந்தானம் – பவர் ஸ்டார் கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது

837
0
SHARE
Ad

a32c12c6-5090-4ecd-bfeb-0e97c3a7a33a1சென்னை,ஜன.19 தமிழ் திரையுலகத்திற்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கோமாளியாக இருந்த நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்தான், தற்போதைய தமிழ் சினிமாவின் வசூல் நாயகன்.

ஆம், பொங்கலுக்கு வெளியான படங்களில் பவர் ஸ்டாரும், சந்தானமும் இணைந்து நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தான் வசூலில் முதல் இடத்தில் உள்ளது.

பவர் ஸ்டாரை ரொம்பவே புத்திசாலித்தனமாக பயன்படுத்தி கோடிகளை வாரி குவித்துக்கொண்டிருக்கும் சந்தானம், மீண்டும் பவர் ஸ்டாருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் இவர்களுடன் மிர்ச்சி சிவாவும் நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

‘யாயா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஐ.ராஜசேகரன் இயக்குகிறார். விஜய் எபினேசர் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகா பாடல்கள் எழுத, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.