கடந்த 19 ஆம் தேதி ராம.நாராயணனுக்கும், சந்தானத்துக்கும் கடிதம் அனுப்பினேன். பதில் அளிக்கவில்லை. அதனால் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
படத்தின் டைட்டிலில் உங்களுக்கு கிரெடிட் தந்திருக்கிறார்களே…?
நீதிபதியின் அறிவுறுத்தலின் காரணமாகத்தான் டைட்டிலில் என்னுடைய பெயரை போட்டிருக்கிறார்கள்.
படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் போது ரிலீஸை தடுத்திருக்கலாமே?
நான் நடித்து இயக்கிய வேட்டியை மடிச்சுக்கட்டு ஒருநாள் லேட்டாக ரிலீசானதால் பல சோதனைகளை சந்தித்தேன், கண்ணீர்விட்டு அழுதேன். அதுபோன்ற ஒரு நிலைமை எதிரிக்குகூட வரக்கூடாது. அதனால்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கவில்லை. ராம.நாராயணனும், சந்தானமும் தெரிந்தவர்கள். நாளை ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்க்க வேண்டும்.
உங்களுக்கு நஷ்டஈடு தரப்பட்டதாக செய்திகள் வந்திருக்கிறதே…?
இந்தப் பிரச்சனையில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு ஒரு பெரிய தொகையை எனக்கு நஷ்டஈடாக தந்ததாக எழுதுகிறார்கள். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனக்கு ஏற்பட்ட பாதிப்பு நாளை மற்றவர்களுக்கும் நடக்கலாம். அதற்காகதான் வழக்கு தொடர்ந்தேன்.
சந்தானம் இது தனது கதை என்கிறாரே…?
கண்ணா லட்டு தின்ன ஆசையா படப்பிடிப்பு நடந்த போது அவர் தினமும் என்னை வந்து பார்த்ததாகவும்தான் எழுதுகிறார்கள். மாப்பிள்ளை விநாயகர் பூஜையில் அவரை பார்த்ததோடு சரி. அதற்குப் பிறகு அவரை சந்திக்கவே இல்லை. ஒரு பேட்டியில் தனது படம் இன்று போய் நாளை வா படத்தின் கதைதான் என்று கூறியிருந்தார். இப்போது பார்த்தால் என் சிந்தையில் உதித்த கதை என்று காமெடி பண்றார்.
உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை…?
படத்தின் வசூர் அறிக்கையை தர வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டிருக்கிறேன். என் தரப்பு நியாயத்தை கோர்ட்டில் நிரூபித்த பிறகு எனக்கான நஷ்டஈட்டை கேட்பேன்.
-மேற்கண்டவாறு பாக்கியராஜ் பேட்டியில் கூறினார்.